அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.... போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை... தீவிரவாதியின் மனைவி கதறல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனக்கும், தனது குடும்பத்துக்கும் துரோகம் செய்துவிட்டு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக அவரின் மனைவி கூறியுள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்களில் Abdul Lathief Jameel Mohamed என்ற தீவிரவாதியும் ஒருவன். Abdul பிரித்தானியாவில் கல்வி கற்றவராவார்.

இந்நிலையில் Abdul குறித்து அவரின் மனைவி ஷிபானா முகமது கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வதாக கூறிவிட்டு அவர் சென்றார்.

அப்போது தான் கடைசியாக அவரை பார்த்தேன், செல்லும் போது போய் வருகிறேன் என்று கூட என்னிடம் அவர் சொல்லவில்லை.

குண்டுவெடிப்புக்கு பின்னர் எங்கள் வீட்டுக்கு பொலிசார் வந்தனர், அப்போது தான் Abdul குறித்த அனைத்து விடயங்களும் எனக்கு தெரிந்தது.

அவர் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளார், என்னையும் என் குழந்தைகளையும் விட்டு சென்றுவிட்டார் என கூறியுள்ளார்.

Abdul மனைவி ஷிபானாவின் தந்தை கூறுகையில், என் மகளுக்கும் Abdulலுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது, எங்கள் வீட்டில் அவர் வாடகைக்கு இருந்த போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

Abdul எப்போதும் அமைதியாக இருப்பார், அவருக்கு நண்பர்களே கிடையாது.

அவர் வேலை குறித்து கேட்டால், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என முகத்துக்கு நேராகவே கூறிவிடுவார்.

அவர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை தினமும் வெளியில் செல்வார், ஆனால் எங்கு செல்வார் என எங்களுக்கு அப்போது தெரியாது என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்