குண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in இலங்கை

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்புடைய மதகுரு உயிரிழந்தவிட்டதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது குறித்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கமாகவே இந்த தாக்குதல் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை பொலிசார் 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தற்போது இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்பட்ட மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

ஹோட்டலில் நடந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers