இலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பு அந்தோணியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் எனது வம்சத்தையே இழந்துவிட்டேன் என பேபி ஜோசப் என்ற நபர் கண்ணீர் சிந்தியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேபி ஜோசப் கூறியதாவது, கொழும்பு கொச்சிக்கடையில் தான் வசித்து வருகிறேன், எனது மகன் பென்னிங்டன் ஜோசப், மருமகள் மற்றும் அவரது மூன்று ஆண் குழந்தைகள் என அனைவரும் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டனர்.

அழகான பிள்ளைகள் கொண்ட அழகிய குடும்பம் சிதைந்துவிட்டது. வம்சமே அழிந்துவிட்டது. எனது மகள் யாழினிதான் அவர்களது சடலங்களை அடையாளம் கண்டு இறுதி சடங்கு எல்லாம் செய்தார்.

எந்த தேவாலயத்தை தேடித்தேடி ஓடினேனோ அந்த தேவாலயத்தில் எனது பிள்ளைகளின் ரத்தம் சிந்தப்பட்டது. எனக்காக எனது மகன் ஒடினான், இன்று என்னை அனாதையாக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டான்.

ஓடுங்கள் அப்பா என எப்போதும் எனக்கு உத்வேகம் கொடுக்கும் எனது மகன் இப்போது என்னைவிட்டு சென்றுவிட்டான், அவனுக்காக இனி நான் வாழ்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்