இலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலால், விசா நடைமுறையில் இலங்கை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தேவாலயம் மற்றும் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலால் தற்போது வரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்தோரும் உள்ளனர்.

ஆனால் சரியாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் சுற்றுலாத் துறை அமைச்சர் John Amaratunga இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு விசா முறையில் சலுகை அளிக்கப்பட்டிருந்தது(அதாவது இலங்கை செல்பவர்கள் புறப்படும் நாட்டிலிருந்து இலங்கை சென்று இறங்கிய பின்பு விசாவுக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.).

இதனால் குறித்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஆனால் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக குறித்த நாடுகளில் இருந்து வருபவர்கள், நிச்சயமாக தாங்கள் புறப்படும் நாட்டில் விசா பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த அறிவிப்பு வரும் வரை மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் சுற்றுல்

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்