தற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உயிரிழந்த தாக்குதல்தாரிகளின் சடலங்கள் மசூதிகளில் அடக்கம் செய்ய அனுமதி தரப்படமாட்டாது என இஸ்லாமிய கூட்டமைப்பான Islamic Cleric association தெரிவித்துள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தி மரணமடைந்த தீவிரவாதிகள் தொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பான Islamic Cleric association முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, தாக்குதல்தாரிகளின் சடலங்களை ஏற்கமாட்டோம் எனவும், அதை மசூதிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அப்பாவி மக்கள் மீது இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை செய்தவர்கள் எங்களை சார்ந்தவர்கள் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்