என் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி என்று கருதப்படும் மௌலவி சஹ்ரான் ஹஷீமின் பூர்வீக வீட்டுக்கும் அவரது பள்ளிவாசலுக்கும் சென்றுள்ளது பிபிசி.

காத்தான்குடியில்தான் மௌலவி சஹ்ரான்பிறந்து வளர்ந்துள்ளார். இவர் குறித்து பேசுவதற்கு அப்பகுதி மக்கள் அச்சம்கொண்டுள்ளார்கள்.

பயங்கரவாதத்துடன் தங்களது ஊர் தொடர்புப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பதட்டம் அங்கு மக்களிடையே இருக்கிறது.

மௌலவி சஹ்ரான் குறித்து அவரது சகோதரி கூறியதாவது, சிறுவயதில் இருந்து அவர் எங்களுடன் அன்பாகவும், சமூகத்துடன் ஒற்றுமையாகவும் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு எங்களுடனான தொடர்பில் இல்லை.

என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஊடகங்களில் இதுகுறித்து நாங்கள் பார்ப்பதில்லை. தாக்குதல் குறித்து அறிந்ததும் எங்கள் உடல் நடுங்கியது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் இறந்து கிடப்பதை பார்க்க கவலையாக இருந்தது. சகோதரனாக இருந்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

நடுத்தர குடும்பத்தில் இயல்பாக வளர்ந்த சஹ்ரான் எவ்வாறு இப்படி பயங்கரவாதியாக மாறினார் என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் இவருக்கு நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவாக இருந்ததாகவும், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்களை கடும் போக்களாராக மாற்றுவதாக சஹ்ரான் ஹஷீமின் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers