மகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்? பொலிஸ் தகவல்!

Report Print Balamanuvelan in இலங்கை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் இரண்டு பேர், இலங்கையின் பிரபல மசாலா பொருட்கள் வர்த்தகரும், கோடீஸ்வரருமான Mohammed Yusuf Ibrahim என்பவரின் மகன்கள் ஆவர்.

33 வயதான Imsath Ahmed Ibrahim மற்றும் 31 வயதான Ilham Ahmed Ibrahim என்னும் அந்த இருவரும் சின்னமன் கிராண்ட் மற்றும் ஷாங்க்ரி லா ஆகிய ஹொட்டல்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள்.

இந்நிலையில் அவர்களது தந்தையான Mohammed Yusuf Ibrahim, தனது மகன்களுக்கு உதவியதாகவும் குண்டு வெடிப்பிற்கு ஊக்கப்படுத்தியதாகவும் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின்பேரில் அவரை பொலிசார் காவலில் வைத்துள்ளனர்.

ஹொட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்குப்பின் பொலிசார் Mohammed Yusuf Ibrahimஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இதற்கிடையில் இன்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பொலிஸ் செய்தி தொடர்பாளர் Ruwan Gunasekera, Mohammed Yusuf Ibrahim, தனது மகன்களுக்கு உதவியதாகவும் குண்டு வெடிப்பிற்கு ஊக்கப்படுத்தியதாகவும் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின்பேரில் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், அவரது குடும்பத்தினர் அனைவருமே காவலில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers