குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயர்கள் என்ன? வெளியானது முழு விவரம்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

இலங்கையில் 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.

இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

அதன்படி அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு முஹம்மத், அபு அல் பாரா, அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதல் நடத்தினார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers