சொந்த நாட்டிலே தாக்குதல் நடத்திய இலங்கை சகோதரர்களின் புகைப்படம் வெளியானது!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது,

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 359 ஆக அதிகரித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்கையில், தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பமே ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்களான இல்ஹாம்(36) மற்றும் Inshaf (38) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் நேற்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

முன்னதாக ஷாங்கரி-லா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் இல்ஹாம் என்பதும், சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது அவருடைய சகோதரன் Inshaf என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதேசமயம் இதுகுறித்து விசாரிக்க சென்ற போது, கர்ப்பிணியாக இருந்த இல்ஹாமின் மனைவி பாத்திமா நடத்திய தற்கொலை தாக்குதலில், அவருடைய 2 குழந்தைகள் மற்றும் மூன்று பொலிஸார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்