இலங்கை குண்டுவெடிப்பு! பயங்கரவாதிகளாக மாறிய கோடீஸ்வரரின் மகன்கள்.... திடுக்கிடும் தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமாக் என்ற இணைய பக்கத்தின் மூலம் இந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தற்கொலைதாரிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளில் இரண்டு பேர் அண்ணன் தம்பிகள் ஆவார்.

இருவரும் இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த கோடீஸ்வரர் கொழும்பில் வத்தல் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இஸ்லாம் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர்தான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இதையடுத்து அந்த அமைப்பின் வாயிலாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பையடுத்து, இவர்கள் இருவரும் பயங்கரவாதிகளாக மாறினர்.

அண்ணன்-தம்பி இருவரும் பயங்கரவாத இயக்கத்தினருடன் நெருங்கி பழகியது தங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் ரகசியமாக வைத்திருந்துள்ளனர்.

இலங்கையில் தாக்குதல் நடத்த அவர்கள் பயிற்சியும் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பில் உள்ள நட்சத்திர ஹொட்டல்களுக்கு சென்று ஒத்திகையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அண்ணன்-தம்பி இருவரும் முதலில் சின்னமான் கிராண்ட் ஹொட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு ஷங்ரி்லா ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.

சின்னமான் கிராண்ட் ஓட்டலில் ஒருவரும், ஷங்ரி்லா ஹொட்டலில் மற்றொருவரும் அறை எடுத்து சனிக்கிழமை தங்கி உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலில் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தினார்கள்.

அண்ணன்-தம்பி பயங்கரவாதிகள் என்பது பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ள கொழும்பு பொலிசார் அவர்களது பெயர் மற்றும் அவர்களது பெற்றோர் பெயரையும் விசாரணை நோக்கம் கருதி வெளியிட மறுத்துவிட்டனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers