இலங்கை குண்டு வெடிப்பில் தீவிரவாதியை முதலில் அடையாளம் கண்ட நபர்.. கண்கலங்க வைக்கும் பின்னணி

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் தேவாலயம் ஒன்றில் தீவிரவாதி ஒருவரை உள்ளே நுழைய விடாமல் ரமேஷ் என்பவர் தடுத்ததன் மூலம் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் தற்போது வரை 390-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ரமேஷ் என்பவர் அங்கு வந்த தீவிரவாதியை தடுத்து நிறுத்தி பேசியுள்ளார். அதன் காரணமாகவே அவன் தேவாலயத்தின் வாசலில் உள்ளே நுழைந்தவுடன் வெடிக்க வைத்துள்ளான்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையின் Batticaloa பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.

40 வயதாகும் இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். Rukshika மற்றும் Niruban என்று 14 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் நாளன்று இவரின் மனைவி Chrishanthini அங்கிருக்கும் Zion தேவாலயத்திற்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க சென்றிருக்கிறார். அவர் ஆசிரியர் என்று கூறப்படுகிறது.

வார வாரம் இங்கு ஆராதனை நடைபெறும் என்பதால், ரமேஷும் அங்கிருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து ஆராதனையில் ஈடுபட்டு வருவார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குழந்தைகளுக்கு தேவையானதை Chrishanthini சொல்லிக் கொடுத்துவிட்டதால், குழந்தைகள் அப்போது வெளியில் வந்து ஸ்னாக்ஸ் போன்றவைகள் வாங்குவதற்கு வெளியில் வந்துள்ளனர்.

ஈஸ்டர் ஆராதனை துவங்குவிருந்த நிலையில், அங்கு இது வரை பார்க்காத ஒரு நபரை ரமேஷ் கண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய முதுகுக்கு பின்னால், மிகப் பெரிய பை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், இது குறித்து விசாரித்த போது, அந்த நபர் நான் இன்றைய தினம் வீடியோ எடுக்க வந்துள்ளேன் என்று கூற, முதலில் நீ யாரிடம் அனுமதி வாங்கினாய் என்று கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபர் அவரை விட்டு செல்ல முயன்ற போது, தொடர்ந்து அவர் கேட்டதன் காரணமாகவே தேவாலயத்தின் வாசலில் நுழைந்து சிறிது நேரத்தில் குண்டை வெடிக்க வைத்துள்ளான்.

இதில் ரமேஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். அதுமட்டுமின்றி அவர் அப்படி தடுக்கவில்லை என்றால், உள்ளே சுமார் 450-க்கும் மேற்பட்டோர் ஆராதணைக்காக காத்திருந்தாகவும், உள்ளே சென்று வெடிக்க வைத்திருந்தால் இழப்பு அதிகமாகியிருக்கும், என்று கூறி அவரை பலரையும் காப்பாற்றியவர் என்று அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...