ராஜினாமா செய்யுங்கள்... இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை காவல்துறை தலைவர், ராணுவ செயலர் ஆகியோரை ராஜினாமா செய்யும் படி அதிபர் சிறிசேனா வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினார்.

இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிபர் சிறிசேனா இலங்கை காவல்துறை தலைவர், ராணுவ செயலர் ஆகியோரை ராஜினாமா செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குண்டு வெடிப்பு குறித்து புலனாய்வு தகவல் அளித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காததால், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாண்டோ, காவல்துரை தலைவர் பூஜீத் ஐயசுந்தரையும் பதவி விலகுமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers