பர்தா அணிவதற்கு தடை விதிக்கவேண்டும்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை!

Report Print Balamanuvelan in இலங்கை

தீவிரவாதிகள் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்வதை தடுப்பதற்காக, முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார்.

United National Partyயின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் Ashu Marasinghe, தான் இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு தனி நபர் மசோதாவை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தான் முன்வைக்க இருக்கும் மசோதாவின் படத்தை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த உடை இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆண் தீவிரவாதிகளும் பெண் தீவிரவாதிகளும் பர்தாவைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு நிற்காமல் பர்தாவை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் Marasinghe கேட்டுக் கொண்டுள்ளார்.

குற்றச்செயலில் ஈடுபட்ட பெண்கள் Dematagodaவிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து பர்தா அணிந்து தப்பியதாக பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து அந்த கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பொலிசார் விசாரித்துக் கொண்டிருக்கும்போது அங்கும் ஒரு குண்டு வெடித்ததில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

அந்த இடத்திலிருந்து சந்தேகத்திற்குரிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தாக்குதல் தொடர்பில், உளவுத்துறை குறைபாடுகள் காரணமாக சில அதிகாரிகள் பதவியிழக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers