இலங்கையில் தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் படித்தவர்.... வெளிநாட்டில் இருந்து வந்த நிதியுதவி: அமைச்சகம் தகவல்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் தற்கொலைப்படையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில் படித்துவிட்டு இலங்கை திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குழுவின் தலைவர் தற்கொலை தாக்குதல்தாரியாக செயல்பட்டுள்ளார். மேலும் சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் படித்த நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers