தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 320க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

மேலும் 500க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலானது உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

இந்த நிலையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவனண்ட் (ஐஎஸ்ஐஎல் ) அமைப்பின் அமாக் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு படத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் ஏழு ஆட்களுடன், தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சாஹிரா ஹசிம் உள்ளார்.

புகைப்படத்தில் நடுவில் இருக்கும் சாஹிரா ஹசிம் தான் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார்.

அவரை சுற்றியுள்ள 7 பேரும் தங்களுடைய முகங்களை மூடியிருக்கின்றனர்.

ஆனால் பயங்கரவாதக் குழு, குண்டுதாரிகளின் பெயர்களை முன்னதாகவே வெளியிட்டுள்ளார். அவர்கள், அபு உபய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு அல்-பரா, அபு முஹம்மது மற்றும் அபு அப்துல்லா ஆகியோர் ஆகும்.

2014ம் ஆண்டு கலிபேட்-ஐ தலைவனாக அறிவித்ததற்கு பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு தாக்குதல் இதுவாகும்.

அந்த வீடியோ காட்சியினுள் சாஹிரா ஹசிமை தவிர மற்ற அனைவருமே தங்களுடைய முகங்களை மூடியிருக்கின்றனர்.

அவர்களுக்கு பின் பக்கமாக ஐஎஸ் கொடி வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் எட்டு ஜிஹாதிகள் ஒரு வட்டத்தில் நிற்கின்றனர். கையைத் தொட்டு, மெய்மறந்து ஐஎஸ் தலைவர் கலீஃபிக்கு தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றன.

கலீஃப் பொதுவெளியில் தோன்றி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers