இலங்கை குண்டுவெடிப்புக்கு 50 மணிநேரம் கழித்து ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது ஏன்? நீடிக்கும் மர்மம்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு தனது இணையபக்கத்தின் மூலம் பொறுப்பேற்றுள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவனண்ட் (ஐஎஸ்ஐஎல் ) அமைப்பின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

எப்போதும் இந்த இணைய பக்கம் வழியாகவே ஐஎஸ் அமைப்பு தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் அமைப்பை சேர்ந்த குழுதான் இலங்கை தாக்குதலை நடத்தி உள்ளது என்று அந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐஎஸ் அமைப்பு ஒரு தாக்குதலை நடத்தினால் சம்பவம் நடந்த அன்றே தாக்குதலுக்கு பொறுப்பினை ஏற்று அறிவிப்பை வெளியிடுவார்கள். பிரான்சில் நடந்த தாக்குதல்களே இதற்கு உதாரணம்.

இந்நிலையில், இலங்கையில் தாக்குதல் நடந்து 50 மணிநேரத்திற்கு பிறகு மிகவும் தாமதாக பொறுப்பேற்றுள்ளதால் பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இன்னும் சில தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், அது நடக்கும் வரை காத்திருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்ட காரணத்தால் இப்போது தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்களும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...