குண்டுவெடிப்பில் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? வெளியான தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மொத்தம் 321 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது,

உயிரிழந்தவர்களில் பலர் விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் என தொண்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோப் பவுல்எராக் கூறியுள்ளார்.

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை அமைச்சர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers