நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை வெடிகுண்டு தாக்குதல்....வெளியான அதிகாரபூர்வ தகவல்

Report Print Raju Raju in இலங்கை

நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே கூறியுள்ளார்.

இதோடு தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இரண்டு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...