இலங்கை குண்டு வெடிப்பு நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பழிவாங்கும் நடவடிக்கை: சொல்கிறார் இவர்!

Report Print Balamanuvelan in இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் 300க்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள நேரத்தில், இது நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்கிறார் முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர்.

பல நாடுகளுக்கான இந்திய தூதராகத்தில் இருந்த ஜி. பார்த்தசாரதி, ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தனது பார்வையில் நியூசிலாந்து மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்கிறார்.

இலங்கையிலிருந்து யாரும் சிரியாவுக்கோ ஈராக்குக்கோ சென்று ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்கோ, அவர்களது பயிற்சியில் இணைந்ததற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

ஆனால் குறிவைக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலும், குண்டு வெடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் கிறிஸ்தவர்களின் புனித பண்டிகை நாள் என்பதாலும் இந்த தாக்குதல் நியூசிலாந்து மசூதிகளில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிவாங்கும் செயல் என்றே தோன்றுகிறது என்கிறார் அவர்.

இந்த குண்டு வெடிப்புகள் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், ஷாங்க்ரி லா ஹோட்டல், சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம், இலக்கு மற்றும் நேரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே நடத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கை மையமாக வைத்தே யாரோ தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல், உலகில் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகள் பரவும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

எனவே இலங்கை அரசு அதை முழுமையாக விசாரிக்கவேண்டும் என்கிறார் ஜி. பார்த்தசாரதி.

கடந்த பத்தாண்டுகளக இலங்கையில் அமைதி நிலவும் சூழலில் ஞாயிறன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏன் இந்த தாக்குதலுக்காக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால், வேறெங்கே நீங்கள் பல கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஏராளமான அயல் நாட்டு சுற்றுலாப்பயணிகளையும் காண முடியும் என்கிறார் அவர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்