இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 310 பேர் பலி, 500 பேர் காயம் மற்றும் 38 பேர் கைது

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் பொலிசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.

இவர்களில் 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்களில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலக நேர ஆரம்பத்தின் போது, 3 நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers