இலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதாக வதந்தி: வெளியான உண்மை

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியாகும் வதந்தியில் உண்மையில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் பல இடங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பொலிசார், இலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியாகும் வதந்தியில் உண்மையில்லை என கூறியுள்ளனர்.

இத்தகைய சம்பவம் நாட்டின் எந்த பகுதியிலும் நடக்கவில்லை என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது போன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்