பேஸ்புக்கில் போட்ட ஒரே ஒரு பதிவு... உதவுவதற்கு சில நிமிடங்களில் குவிந்த நூற்றுக்கணக்கான இலங்கை மக்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் படுகாயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டதால், ரத்த வங்கி அது குறித்து பேஸ்புக்கில் போட்ட பதிவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்ய முன்வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் நடந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்வங்களால் 290 பேர் பலியாகியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்டைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் பலர் மாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின. போதிய இடவசதியின்மை, ரத்தப் பற்றாக்குறை எனப் பிரச்னைகள் இருந்தன.

இதனால், இலங்கை தேசிய ரத்த தான சேவை மையம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் தானம் வழங்கலாம் என அறிவித்திருந்தது.

இந்தப் பதிவு பேஸ்புக்கில் வைரலாகியதால் உடனடியாக மக்கள் கூட்டம் கூட்டமாக ரத்த வங்கியில் ரத்தம் தானம் செய்ய முன்வந்தனர். மக்களின் ஒற்றுமை குறித்தப் இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்