ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களுக்கான போட்டியில் இடம்பெற்ற இலங்கை புகைப்படம்

Report Print Balamanuvelan in இலங்கை

ட்ரோன்கள் மூலம் மிக உயரத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான போட்டியில் இலங்கையில் உள்ள ஒரு இடமும் இடம்பெற்று அந்நாட்டுக்கு புகழைத் தேடித் தந்துள்ளது.

ட்ரோன்கள் மூலம் எடுக்படும் அந்த படங்கள்,புகைப்படங்களைப் பகிரும் Dronestagram என்னும் தளத்தில் பகிரப்படுகின்றன.

இதற்குமுன் எப்போதும் பார்க்காத ஒரு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகளை அவை காட்டுகின்றன.

அவற்றில் Sygiriya என்னும் இலங்கையின் lion rock முதல் El Salvadorஇன் El Impossible தேசிய பூங்காவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி உட்பட பல இடங்களைக் காட்டும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு Dronestagram, சிறந்த ட்ரோன் புகைப்படங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற படங்களை வெளியிட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றுடன் இணைந்து அது 8000 சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்துள்ளது. அதில் இலங்கையின் Sygiriya என்னும் lion rockஇன் படமும் இடம்பெற்றுள்ளது.

போட்டியில் முதலிடத்தைத் தட்டிச் செல்வது, பிரான்சில் லாவண்டர் பூக்களை அறுவடை செய்யும் Provence - Summer Trim என்ற பெயரில் Jerome Courtial என்பவர் எடுத்த புகைப்படம்.

இரண்டாவது இடத்தைப் பிடிப்பது, Infinite Road to Transylvania என்று பெயரிடப்பட்டுள்ள Calin Stan என்பவர் எடுத்த புகைப்படம்.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள புகைப்படம் கிழக்கு கிரீன்லாந்தின் Florian Ledoux எடுத்த Ice Formationஎன்னும் படம்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்