ஈழத்தமிழர்களின் தந்தையான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்: ஸ்டாலினிடம் கண்ணீர்விட்ட புகைப்படம்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான காருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 7-ஆம் திகதி காலமானார்.

இதனால் இவரின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியின் உடல் சென்னை மெரினாவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இலங்கை ஈழத்தமிழர்களின் தந்தையான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது, ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டுள்ளார்.

அது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்று கொள்கையுடன் இருந்தவர் செல்வநாயகம். இதன் காரணமாகவே அவர் ஈழத்தமிழர்களின் தந்தையாக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பலரும் வந்த நிலையில், ஸ்டாலினிடம் நின்று கண்ணீர்விட்டு பேசிய செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers