இலங்கை அகதியிடம் இருந்து வாங்கப்பட்ட 100 பவுன் திருட்டு நகைகள்: கடை உரிமையாளர் விளக்கம்

Report Print Deepthi Deepthi in இலங்கை

நாமக்கல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மனைவி அனுவுடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக திருட்டு வேலையில் ஈடுபட்டு இதுவரை 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டு இருவரு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை ராஜா தன் மனைவி மூலம் நாமக்கல்லில் இருக்கும் `அட்டிகா' நிறுவனத்துக்குச் சொந்தமான கடையில் விற்றுள்ளார்.

இதுவரை, கொள்ளையடித்த நகைகளில் 100 பவுனுக்கும் மேல் அந்தக் கடையில் விற்றுள்ளார். அதற்கான ரசீதுகளையும் பொலிசாரிடம் காட்டியுள்ளார் என்று கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, நாமக்கல்லைச் சேர்ந்த அட்டிகா நிறுவன உரிமையாளர் கூறியதாவது, இந்தப் பிரச்னையில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை.

வழக்கமாக நகைகளைக் கொண்டுவருபவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளைப் பரிசோதித்த பிறகே, அவர்களுடைய நகைகளுக்கான பணத்தைத் திருப்பித் தருவோம்.

மற்றபடி அந்த நகைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது குறித்து நாங்கள் கண்காணிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் எங்கள் நிறுவனத்தின் மீதும், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பதை சட்டப்படி சந்திப்போம். இதில் எங்கள் ஊழியர்களுக்குத் துளியும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...