தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிப்பு? புகைப்படங்கள்

Report Print Thayalan Thayalan in இலங்கை

கடந்த 21 ஆம் திகதி தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

அது வெள்ளிரும்புத் தயாரிக்கும் தொழிற்சாலையென அடையாளப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.

குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில், தற்கொலை தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிப்பதற்காக ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளன.

ஹோட்டலொன்றில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட இன்ஷாப் அஹமட்டின் வர்த்தகரான தந்தையின் சொந்த தொழிற்சாலையென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தொழிற்சாலையை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய நிலையில் தொழிற்சாலையில் முகாமையாளர் உட்பட 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளராக பாகிஸ்தான் பிரஜையொருவர் கடமையாற்றி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers