இலங்கையில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவைகளில் மின்குமிழ்கள்

Report Print Thayalan Thayalan in இலங்கை
இலங்கையில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவைகளில் மின்குமிழ்கள்

இலங்கையில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவைகளில் மின் ஒளிக்காக, மின்குமிழ்கள் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது..

இதற்கு கொழும்பு மாநகர சபை அனுசரனை உதவியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் 23 இடங்களில் 46 சூரிய மின்குமிழ்கள் பொறுத்தப்படவுள்ளன. இதற்காக ஒரு கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முதலாவது மின்குமிழ் கொழும்பு சி.டப்ளியூ. டப்ளியூ.கன்னங்கர மாவத்தையில் தெவட்டஹா பள்ளிவாசல் அருகாமையில் பொறுத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் கடவை மூலம் ஒருவர் வீதியை கடக்கும் பொழுது மஞ்சள் கடவை மின் ஒளி அலங்காரத்துக்கு உள்ளாகுவதுடன், இதற்கு மேலதிகமாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை சமிஞ்சையும் விடுக்கும் விகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்