யாழில் ராணுவ வாகனம் மோதித் தள்ளியதில் ஒருவர் உயிரிழப்பு!

Report Print Thayalan Thayalan in இலங்கை
112Shares
112Shares
lankasrimarket.com

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் ராணுவ வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் விஜிதரன் (வயது -36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பணி முடிவடைந்து மோட்டார் சைக்கிளில் வீடு சென்றுகொண்டிருந்த சமயத்தில், வேகமாக வந்த ராணுவ கப் ரக வாகனமொன்று அவரை பலமாக மோதித் தள்ளியுள்ளது. மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாக சிதறி, குற்றுயிராய்க் கிடந்த விஜிதரன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், பலத்த அடி மற்றும் அதிக ரத்தப் போக்கால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ராணுவ வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள சுன்னாகம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்