சிவபெருமானை கரம் பிடித்த பார்வதி! எப்படி தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

சிவபெருமானின் மனைவிதான் பார்வதி. பார்வதி அன்பு, பக்தி, வளம் போன்ற பல வலிமை கொண்ட கடவுளாக வணங்கப்படுகிறாள். புராணக்கதைகளில் பார்வதிக்கு ஆயிரக்கணக்கான வடிவங்களும், அம்சங்களும் இருக்கிறது.

லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறாள். மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.

இவர் கங்கைக்கு தங்கையாவார். பார்வதிக்கு விநாயகர், முருகன் என இரு பிள்ளைகள் உண்டு. பார்வதி விஷ்ணுவின் தங்கையாக கருதப்படுகிறாள்.

மலையரசனின் மகள் பர்வதம். பர்வதம் மலையைக் குறிக்கும். எனவே பர்வதம் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து "பார்வதி" என்ற பெயர் வந்தது.

வெகுகாலம் சிவபெருமான் திருமணம் செய்யாமல் இருந்தார். பல ஆண்டுகாலம் தவம் புரிந்து கொண்டிருந்தார். தம்மை யாரும் தொல்லை செய்துவிடக் கூடாது என்று யாருக்கும் தெரியாத ஓரிடத்தில் தியானம் செய்துவந்தார் சிவபெருமன்.

இப்படியே சிவன் தியானத்தில் இருந்தால் எப்படி? என்று சிவபெருமானின் மீது அக்கறை கொண்ட பிரம்ம தேவனும் மகாவிஷ்ணுவும் ஆலோசித்தனர். சிவனுக்கு மணமகளாக சக்தியை பிரம்ம தேவன் சொன்னார்.

சக்தி, உமா, காளி, துர்கா போன்ற அவதாரங்கள் பார்வதிக்கு உள்ளன.

இளமைப் பருவத்திலிருந்தே பார்வதி சிவன் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். மணந்தால் சிவனை மட்டும்தான் மணக்க வேண்டும் என்று எண்ணினாள். சிவனின் காதலை நாம் பெற வேண்டும் என்று பார்வதி தவத்தில் இறங்கிளாள்.

சிவபெருமான் தவம் செய்யும் அதே குகைக்கு பார்வதி சென்றாள். முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்து பூக்களாலும் அழகிய கோலங்களாலும் அலங்கரித்தாள். இச்செயல்கள் சிவனை சிறிதும் அசைக்கவில்லை. அவர் ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் இருந்தார்.

பிறகு பார்வதி காட்டிற்கு சென்று சிவனுக்காக பழங்களை பக்தியுடன் பறித்துக் கொண்டு வந்தாள். ஆனால் அந்த பழங்களும் சிவனை சென்று சேரவில்லை. யாரும் அசைக்க முடியாத கடுமையான தவத்தில் சிவபெருமான் இருந்தார்.

இதனால் மனமுடைந்த பார்வதி சிவபெருமானைப் போல் நானும் தவம் செய்தால்தான் சிவபெருமான் என்னை மணப்பார் என்று தவத்தில் இறங்கினாள் பார்வதி. எந்த உணவையும் உட்கொள்ளாமல் தீவிரமான தவத்தில் இறங்கினாள்.

பார்வதியின் தவத்தால் மனம் இளகிய பிரம்ம தேவன் பார்வதி முன் தோன்றினார். அப்போது பார்வதி பிரம்மதேவனிடம் ஒரு வரத்தை கேட்டாள். சிவபெருமான் என்னை ஏறெடுத்துப் பார்க்காத காரணம் என்னுடைய கருப்பு நிறம்தான். என்னை சிவந்த நிறமுள்ள அழகிய பெண்ணாக மாற வேண்டும் என்று பிரம்மதேவனிடம் வரம் கேட்டாள்.

பார்வதி கேட்ட வரத்தை பிரம்மதேவர் அளித்தார். அவர் வரத்தில் பார்வதியை மிக அழகான செக்கச் சிவந்த பெண்ணாக மாற்றினாள். உருமாறிய பார்வதி மீண்டும் குகைக்குள் சென்றாள்.

சிவபெருமானுக்காக கடும் தவம் புரிந்தாள். சிவபெருமான் மனம் உருகி கண்களை திறந்து பார்க்கும்போது அவளுடைய அழகு சிவபெருமானை மயக்கியது. கடுமையான தவம் புரிந்து பார்வதி சிவபெருமானின் மனதில் இடம் பிடித்தாள். சிவபெருமான் பார்வதியின் ஆசையை நிறைவேற்ற பார்வதியை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்