வறுமையில் சிக்கி தவிப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க...

Report Print Kavitha in ஆன்மீகம்

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.

வறுமையில் இருப்பவர்களின் கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

  • முதலில் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு பன்னீர் தெளித்து, சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த இடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு தலைவாழை இலையை சாமி படத்திற்கு முன்பு வைத்து, அதன்மேல் மஞ்சள் குங்குமம் வைத்த தேங்காய் ஒன்றை வைக்கவும்.
  • ஒரு தாம்பூலத்தில் 108 என்ற கணக்கில் மல்லிகை பூவையும், சிறிதளவு குங்குமமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அந்த 108 மல்லிகைப் பூவில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாழை இலையின் மீது வைத்திருக்கும் தேங்காய் மேல் போட்டு, அதனுடன் சிறிதளவு குங்குமத்தையும் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் “ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா” என்ற மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிப்பது சிறந்தது.
  • இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்வது மிகவும் சிறந்தது. 108 முறை மந்திரத்தை உச்சரித்த பின்பு ஒரு மஞ்சள் நிற துணியில் அந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் அழுத்தமாக கட்டி வீட்டு வாசற்படியின் மேல்பகுதியில் நடுவே கட்டி தொங்கவிட வேண்டும்.
  • 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்வதில் சிறந்தது. பழைய தேங்காயை எடுத்து ஓடும் நீரில் போட்டுவிடலாம்.
  • துணியை துவைத்து மீண்டும் அதே துணியை பயன்படுத்திக்கொள்ளலாம். பௌர்ணமியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்