கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையா? இந்த இளநீர் பரிகாரம் ஒன்றே போதும்

Report Print Kavitha in ஆன்மீகம்

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையிலிருந்து விலக ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உள்ளது.

தற்போது அதில் கடன் பிரச்சினையிலிருந்து எளிதில் மீளும் பரிகாரம் ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.

  • இளநீர் ஒன்றை சீவி அதில் இருக்கும் நீரை பாதியளவு குறைத்துக் கொள்ளுங்கள். பாதியளவு நிரம்பிய இளநீரினுள் நவதானியங்கள் சம அளவில் எடுத்து போட்டு விடுங்கள்.

  • இப்போது மேல் பாகத்தை நல்ல வெற்றிலைகளால் மூடி வைக்க வேண்டும். இளநீர் கீழே சாயாமல் இருக்க அடிப்பாகத்தில் அரிசியை பரப்பிக் கொள்ளலாம்.

  • வெற்றிலையின் மேல் அகல் விளக்கு ஒன்றை வைத்து கிழக்கு முகமாக பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

  • சரியாக ஒரு வாரம் தீபம் எரிய வேண்டும். அந்த ஏழு நாட்களில் எண்ணெய் மற்றும் திரியை மற்றும் தினமும் மாற்றி விட வேண்டும்.

  • தீபத்தின் ஜோதி சக்தியெல்லாம் அந்த தானியங்களில் முழுவதும் இறங்கிவிடும். தானியங்கள் முளை விட ஆரம்பிக்கும்.

  • ஏழாம் நாள் அன்று முளை விட்ட அந்த தானியங்களை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்த தானியத்தை பொடி செய்து கொள்ள வேண்டும்.

  • மஞ்சளில் நனைத்த சுத்தமான துணி கொண்டு அந்த பொடியை அதனுள் போட்டு நிரப்பி நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.

  • இந்த சக்தி வாய்ந்த முடிப்பை பூஜை அறையில் வைத்து கடன் பிரச்சனை தீர மனதார வழிபட்டால் கட்டாயம் கடன் பிரச்சனை தீரும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்