உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா? இதை மட்டும் பண்ணுங்க.. சீக்கிரம் செல்வந்தராகலாமாம்!

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆன்மீகப்படி நமது வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியேற என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

 • குலதெய்வ வழிபாடும் பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

 • வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 • அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

 • வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் கொடுப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

 • நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் தரவும், இதனால் பணவரவு ஏற்படும்.

 • குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும்.

 • சொர்ணாகர்ஷண பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

 • அபிஜித் முகூர்த்த நேரமான பகல் 12 மணி அளவில் அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

 • பாசிப்பருப்பை ஒரு பச்சைபையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாடிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

 • பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

 • தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

 • கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

 • வெள்ளிக்கிழமை சுக்ரஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 • தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

 • பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தாமரை மணிமாலையை வீட்டில் வைத்திருக்கலாம்.

 • மயில்தோகை, வலம்புரி சங்கு, சாளக்கிராமம் என தெய்வீக சக்திகள் நிறைந்த பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தால் பொருளாதார வளம் மேம்படும்.

 • வீட்டில் பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும்.

 • மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

 • சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

 • இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

 • தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழிப்பதன் மூலம் பணம் கிடைக்கும்.

 • செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

 • சம்பாதிப்பதில் ஒரு தொகையை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...