நீங்கள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவரா? இதோ உங்கள் பொது குணங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்
511Shares

நட்சத்திர வரிசையில் ஐந்தாவதாக உள்ள மிருகசீரிடம், இரண்டு ராசிகளில் இடம்பெறும் நட்சத்திரம் ஆகும்.

தற்போது இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுபலன்கள் மற்றும் சிறப்பியல்புகள் என்ன என்பதை பார்ப்போம்.

பொதுவான குணங்கள்

எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள்.

தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுதந்திரமானவர்கள்.

மிருகசீரிட நட்சத்திர சிறப்பியல்புகள்:

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் எதிலும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டுவார்கள். தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதை பொறுக்க மாட்டார்கள்.

வயதில் மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். பள்ளிக்கூட பாடங்களில் ஆர்வம் அதிகமிருக்காது. உலக விடயங்களை கற்றுக் கொள்வதில் பேராவல் இருக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரி கல்விகளை முழுமையாக முடிக்க முடியாத நிலையும் உண்டாகும்.

எப்போதும் நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரம் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள் ஆவர். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டார்கள்.

செய்கிற வேலைகளில் ஒழுக்கம், விதிகளை கடைபிடித்து செயல்படுவதல் போன்றவை இருக்கும். எந்த ஒரு விடயத்தையும் ஒரு முறை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ கிரகித்துக் கொள்ளும் மன ஆற்றல் மிக்கவர்களாக மிருகசீரிடம் நட்சத்திர காரர்கள் இருப்பார்கள்.

சிறப்பான பேச்சாற்றல் இருக்கும். அதன் மூலம் பகைவரையும் நண்பராக்கிக் கொள்வார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் தான் பிறரின் கவனத்திற்குரிய நபர்களாக இருப்பார்கள்.

பொதுவாகவே மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் நல்ல வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.

வாழ்வில் எந்த ஒரு கஷ்டம் ஏற்பட்டாலும், அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தங்களின் கடின உழைப்பின் மூலம் அதை விட சிறப்பான நிலைக்கு வந்து விடுவார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் அவர்களின் விருப்பம் போலவே நடைபெறும். இவர்களுக்கு வருகின்ற வாழ்க்கைத் துணை நல்ல பொருளாதார வசதி நிறைந்த குடும்பத்தில் இருந்து வருபவராகவே இருப்பார்.

வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களை வருத்திக்கொண்டு கடினமாக உழைத்து பொருள் சேர்ப்பார்கள்.

எந்த ஒரு விடயத்திலும் பிறருக்காக விட்டுக் கொடுத்து செல்லும் தன்மை கொண்ட மனப்பான்மை மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.

இந்த குணம் காரணமாக உண்மையான நண்பர்களை அதிகம் பெற்றவர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கின்றனர்.

தன்னால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படக் கூடாது என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு ஏற்படும் வசதி குறைவு, துயரங்கள் போன்றவை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகமலர்ச்சியுடன் இருப்பார்கள்.

செயல்படுவதில் அதீத வேகம் இருக்கும். அதே நேரத்தில் ஆழமாக சிந்தித்து செயலாற்றும் சிந்தனைத் திறனும் பெற்றவர்களாக மிருகசீரிட நட்சத்திரக்காரர் இருக்கின்றனர்.

மிருகசீரிடம் நட்சத்திர பொது பரிகாரங்கள்

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி, பழம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வருவது அவர்களின் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.

அதே வெள்ளிக்கிழமையில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியம் செய்து, தீபமேற்றி வழிபட வேண்டும்.

வேதபாராயணங்கள் செய்யும் திருமணமாகாத ஒரு இளம் பிராமணருக்கு புது வேட்டி துணியை தானம் அளிப்பது உங்களின் தோஷங்களை போக்கும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:
  • அதிர்ஷ்டஎழுத்துகள் : V, K
  • அதிர்ஷ்ட எண் : 3, 6, 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு, வெள்ளி, சாம்பல் நிறம்
  • அதிர்ஷ்டக் கிழமை : செவ்வாய், வெள்ளி
  • அதிர்ஷ்ட ரத்தினம் : பவளம்
  • அதிர்ஷ்ட தெய்வம் : சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்