ராகு – கேது தோஷங்கள் எளிதில் நீங்க வேண்டுமா? இந்த மந்திரத்தை துதிங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை 'கால சர்ப்பதோஷம்' என்று அழைக்கப்படுகிறது.

பாம்பை கொல்வதால் ஒருவருக்கு நிச்சயமாக நாக, சர்ப்ப தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்கள் அனைத்தும் நீங்க அதற்குரிய மந்திரத்தை துதிப்பதே சாலச் சிறந்தது.

பாம்பின் வடிவில் இருக்கும் நாக தேவதைகளை போற்றும் மந்திரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மந்திரத்தை எப்படி துதிப்பது என்று பார்ப்போம்

மந்திரம்

சர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்

நர்ம தாயை நம ப்ராத

நர்ம தாயை நமோ நிசி

நமோஸ்து நர்மதே துப்யம்

த்ராஹிமாம் விஷ ஸர்பத

இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 27 முறை அல்லது 108 முறை துதிப்பது நல்லது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று, புற்றிற்கு முன் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் பாம்புகளை கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள், ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலையால் ஏற்படும் திருமணத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கி நன்மையான பலன்களை பெறலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers