உத்திராடம் நட்சத்திரக்காரர்களே! தனலாபம் அதிகரிக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

உத்திராடம் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரமாகும்.

27 நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தியோராவது நட்சத்திரமாக வருவது உத்திராடம் நட்சத்திரம் ஆகும்.

இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமையும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகமிருக்கும்.

நட்சத்திரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலன்களை ஜோதிடக்கலையில் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மேன்மையான நிலையை பெற செய்ய வேண்டிய பரிகாரம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய உதயத்தின் போது சூரிய பகவானை வணங்குவதால் உங்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.
  • இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகப் பெருமான் என்பதால் ஞாயிறு மற்றும் வாரத்தின் இன்ன பிற நாட்களிலும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவேண்டும்.
  • தனுசு ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகர் கோயிலில் இனிப்புகளை பக்தர்களுக்கு தானம் வழங்க வேண்டும்.
  • மகர ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் கோயில்களில் செய்யப்படும் யாகத்தின் போது யாகத்தில் இடுவதற்கு கருப்பு எள் தானம் தர வேண்டும்.
  • வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் குரு பகவானை வழிபட்டு வந்தால் உங்களின் வாழ்வில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளும், குறைகளும் தீரும்.
  • உத்திராட நட்சத்திரத்திற்குரிய விருட்சம் பலா மரம் ஆகும். பலா மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று பல மரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் உங்கள் தோஷங்கள், சாபங்கள் நீங்கி அதிர்ஷ்டங்களும், தனலாபங்களும் பெருகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers