மகாலட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பேறுகள்!

Report Print Jayapradha in ஆன்மீகம்

மகாலட்சுமியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

 • உடல் எப்பொழுதும் இளமையுடன் அழகு பெற்று ஒளிமயமாகும்.
 • வீட்டில் பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.
 • பிறர்மேல் உண்டான தீராத பகை அழிந்து மனதில் அமைதி உண்டாகும்.
 • படிப்பில் அதிகளவு ஈடுபாடு ஏற்பட்டு கல்வி ஞானம் பெருகும்.
 • விடுகளில் பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்
 • என்றும் பணப்பிரச்சனை இன்றி நிலைத்த செல்வம் அமையும்.
 • வறுமையில் உள்ளவர்களுக்கு வறுமை இல்லாத நிலை மாறும்.
 • பெரிய பெரிய மகான்களின் ஆசி கிடைக்கும்.
 • விட்டில் உள்ள தானியங்கள் அதிகமாக பெருகி தானிய விருத்தி ஏற்படும்.
 • பிறரிடம் பேசும் போது பேச்சில் வாக்கு சாதுரியம் உண்டாகும்.
 • தொடர்ந்து வம்சவழியான வம்ச விருத்தி ஏற்படும்.
 • பணிகளில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
 • நீண்ட நாட்களான புதியதாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு வாகன வசதிகள் அமையும்.
 • அரசியலில் உள்ளவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.
 • புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்