கண்டமதனா மலையில் வாழும் ஹனுமான் : அதிர்ச்சியூட்டும் தகவல்

Report Print Kavitha in ஆன்மீகம்
379Shares
379Shares
ibctamil.com

இராமாயணத்தில் மிகவும் புகழ் பெற்ற தலைசிறந்த வீரனரும் ஸ்ரீ ராமனின் தீவிர பக்தருமான ஆஞ்சநேயர் இந்த உலகில் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்களின் நம்புகையாகும்.

விஞ்ஞானத்தையும் மீஞ்சியது தான் தெய்வ சக்தி என்பார்கள் இருப்பினும் அவர்மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை நம்புகின்றனர். அப்படி இந்தியாவில் பல்வேறு இடங்கள் கூறப்பட்டாலும், தமிழகத்தின் பாம்பன் தீவருகே அவர் அடிக்கடி வருவதாக நம்பப்படுகிறது.

சீதையை காக்க அனுமன் படை இந்த வழியாகத்தான் சென்றதாக வரலாறு கூறுகின்றது.

கடவுள் அனுமதியின் வரத்தைப் பெற்றுக் கொண்டார் ஹனுமான் அவர் உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமேஸ்வரத்தின் அருகில் அமைந்துள்ளது பாம்பன் தீவிலுள்ள மலை ஒன்றில் ஆஞ்சநேயர் அடிக்கடி வந்து செல்வதாக நம்பப்படுகிறது.

ஆஞ்சநேய பக்தர்கள் பலர் இதை நம்பி இந்த கோயிலுக்கு சென்று பூசை செய்து வழிபட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் இந்த கோயில்களில் ஆஞ்சநேயரைப் பார்த்ததாகவும் சொல்கின்றனர்.

கண்டமதனா மலைக்குன்றின் உச்சியில் இருந்தே ஆஞ்சநேயர், ராவணன் ஆட்சி செய்த இலங்கைப் பகுதியை நோட்டமிட்டதாகவும், இங்கிருந்து ஒரே தாவலில் இலங்கைச் சென்றடைந்ததாகவும் இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கட்டப்பட்ட கோயில் உள்ளது. எனினும், ஹனுமான் ராம் பெருமை பாடிக்கொண்டிருக்கும் எல்லா இடங்களிலும் வசிக்கிறார் என்று எப்போதும் கூறப்படுகிறது.

ராமர் பாதம் எனும் இடத்துக்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து இந்த கோயிலுக்கு போகும் வழியில் எண்ணற்ற தீர்த்தங்களும், கோயில்களும் அமைந்துள்ளன.

இரட்டைப் பிள்ளையார் கோயில், சுக்ரீவர் தீர்த்தம்,அம்மன் கோயில், அங்கதன் தீர்த்தம், ஜாம்பவான் தீர்த்தம், ஷாக்சி ஹனுமான் கோயில், ராமர் பாதம் கோயில் ஆகியன அவற்றுள் முக்கியமானவையாகும்.

இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் சுக்ரீவர் தீர்த்தத்தைக் காணலாம். அருகிலேயே சுக்ரீவர் கோயில் அமைந்துள்ளது.

இந்த மலையில் சிறப்பான சூரிய உதயம் மற்றும் மறைவு காட்சிகளைக் காணமுடியும்.

அவர் இங்கு மட்டுமல்ல இமயமலையின் காடுகளில் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. ஹனுமானின் மந்திரம் முழக்கமிட்ட போதெல்லாம், பக்தர்களிடம் அவரது தரிசனம் வழங்குவதற்கும், அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் அந்த இடங்களில் அவர் வெளிப்படுகின்றார் என்று நம்பப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்