சிவபெருமானின் நீலநிறத்திற்கு என்ன காரணம்?

Report Print Printha in ஆன்மீகம்
141Shares
141Shares
lankasrimarket.com

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என்று இரண்டு பிரதோஷங்கள் வரும்.

சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

சிவபெருமானுக்கு நீலகண்டன் பெயர் வர காரணம்?

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது.

அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.

நடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம்.

ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டர் என திருப்பெயர்ப் பெற்றார் சிவபெருமான்.

சனி பிரதோஷம் சிறப்பு மிக்கதாக கருதுவது ஏன்?

சிவபெருமான் 11-ம் பிறையாகிய ஏகாதசியில் விஷம் உட்கொண்டார். 12-ம் பிறையாகிய துவாதசியில் காட்சி அளித்தார்.

13-ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் கொடுத்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக் கிழமையாகும்.

எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்