அழிந்து வரும் உயிரினத்தை நூற்றுக்கணக்கில் வளர்த்து வரும் அதிசய குடும்பம்!

Report Print Raju Raju in சிறப்பு
104Shares
104Shares
ibctamil.com

வீட்டில் செல்லப்பிராணிகளுக்கு பதிலாக, அழிந்துவரும் பறவைகள் இன பட்டியலில் இருக்கும் சிட்டுக்குருவிகளை நபர் ஒருவர் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் பகுதியில் வசித்து வரும் சர்தார் இந்தர்பால் பாத்ரா என்பவரது வீட்டில் 100-க்கும் மேற்ட்ட சிட்டுக்குருவிகள் உலா வருகின்றன.

அவை வசிப்பதற்கு ஏற்ப வீட்டின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் பாத்ரா கட்டமைத்துள்ளார்.

சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப இவர் வீட்டை சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன.

16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகில் இருந்த மரம் வெட்டப்பட்டபோது அதில் வசித்த சிட்டுக்குருவி தான் கட்டிய கூட்டை இழந்து பரிதவித்த நிகழ்வு அவருடைய மனதை நெகிழவைத்திருக்கிறது.

அப்போதே சிட்டுக் குருவிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்க முடிவு செய்த பாத்ரா சிறு மண்பானைகளை ஆங்காங்கே பதித்து வைத்திருக்கிறார். அவைகளாகவே கூடு கட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளையும் வளர்க்க தொடங்கி இருக்கிறார்.

இது குறித்து பாத்ரா கூறுகையில், இன்று எனது வீட்டின் உள்ளே சிட்டுக்குருவிகள் பாதுகாப்பாக வசிப்பதற்கு 20 கூடுகள் இருக்கின்றன. வெளிப்புறத்தில் 200-க்கும் மேற்பட்ட கூடுகள் அமைந்திருக்கின்றன

நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் என் வீட்டுக்கு வந்து இயற்கை சூழலில் சிட்டுக் குருவிகள் வசிப்பதை ஆச்சரியமாக பார்வையிடுகிறார்கள்.

பாத்ராவின் மகள் அம்ரிதாவும் சிட்டுகுருவிகளை பேணி காத்து வருகிறார்.

அவர் கூறுகையில், என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சிட்டுக்குருவிகளை அக்கறையாக கவனித்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் அவைகளுக்கான வசதிகளை செய்துவிட்டுத்தான் செல்வோம் என கூறியுள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்