சவக்கிடங்கில் அநாதரவாக விடப்பட்ட சிறுமியின் உடலை சாப்பிடும் தெருநாய்: பதற வைத்துள்ள வீடியோ!

Report Print Balamanuvelan in தெற்காசியா

இந்திய மருத்துவமனை ஒன்றின் சவக்கிடங்கில் அநாதரவாக விடப்பட்ட சிறுமியின் உடலை, தெருநாய் ஒன்று கடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி, மனதை பதறடிக்கச் செய்துள்ளது.

அந்த வீடியோவில், ஒரு தெருநாய் சவக்கிடங்கில் மூடி வைக்கப்பட்டுள்ள ஒரு உடலின் கால் பகுதியில் உள்ள துணியை விலக்கி, அந்த உடலை சாப்பிடுவதைக் காணமுடிகிறது. உத்தரப்பிரதேசத்திலுள்ள சம்பல் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

13 வயது சிறுமி ஒருத்தி, கார் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், அவளது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் கோபமடைந்துள்ள நிலையில், அவர்கள் உடற்கூறு ஆய்வு வேண்டாம் என கூறியதால்தான் அந்த சிறுமியின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது என அவர்கள் மீதே குற்றம்சாட்டும் முயற்சியும் நடந்தேறியது.

பெரும் பரபரப்பைத் தொடர்ந்து, சவக்கிடங்கு ஊழியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த மருத்துவர் ஒருவரும், மருந்தக ஊழியர் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Image: Newslions/Jam Press

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்