பாகிஸ்தானில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று புதரில் வீசப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு Khyber Pakhtunkhwa பிராந்தியத்தில் உள்ள சரோ கெல் என்ற கிராமத்தில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து முந்தைய நாள் காணாமல் போன பின்னர் மதிஹா என மட்டுமே அடையாளம் காணப்பட்ட சிறுமி ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
7 வயதேயான சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரது குடும்பத்தினரும் பிற உள்ளூர்வாசிகளும் வீதிகளில் இறங்கி மதிஹாவுக்கு நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பொலிசார் அளித்த வாக்குறுதியை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி மதிஹாவுக்கு நீதி கிடைக்குமாறு பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.