தன் ஆசைகள் நிறைவேறுவதற்காக சொந்த தங்கையையே நரபலி கொடுத்த அண்ணன்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

நரபலி கொடுத்தால் தெய்வம் தனது ஆசைகளை நிறைவேற்றும் என்ற எண்ணத்தில் சொந்த தங்கையையே நரபலி கொடுத்துள்ளார் ஒரு அண்ணன்.

இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த சுபோபன் ரானா (28) என்பவரின் தங்கை ஜனனி (12). இரண்டு நாட்களாக மகளைக் காணாததால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர்.

பொலிசார் விசாரணையில், ஜனனியின் அண்ணனான ரானா, 9 வயது சிறுவன் ஒருவனை பலி கொடுத்ததற்காக சிறை சென்று ஜாமீனில் வந்துள்ளதால், பொலிசாரின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது.

ரானாவை விசாரித்ததில், தான்தான் ஜனனியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

This is the image local media have said is Subhoban Rana

தனது ஆசைகள் நிறைவேறுவதற்காக, தனது தெய்வத்தை சந்தோஷப்படுத்துவதற்காக தனது சொந்த தங்கையை நரபலி கொடுத்ததாக தெரிவித்துள்ளார் ரானா.

தங்கள் மகளை கொலை செய்த ரானாவுக்கு கடுமையான தண்டனை அளிக்குமாறு அவளது பெற்றோர் பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரானா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஜனனியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Credit: Odishatv

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...