அழகான பெண்ணாக மாறி இளைஞரை திருமணம் செய்து கொண்ட 26 வயது நபர்! 4 மாதத்தில் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய நபர் திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டோரை சேர்ந்தவர் பலாக் திவாரி (26).

இவர் நான்கு மாதங்களுக்கு முன்னர் அழகான பெண்ணாக மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து ரோகித் என்பவரை பலாக் திருமணம் செய்தார்.

ஆனால் பலாக்கின் பாலின மாற்று அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

மேலும் சிறுநீரக பகுதியில் பலாக்குக்கு பிரச்சனை இருந்தது, இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த பலாக் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் பலாக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் பலாக்கின் பெயர் ஹரீஷ் என இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னரே பலாக் என மாற்றி கொண்டதாகவும் தெரிவித்தனர்.

பலாக்கின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்