2 பவுண்டுகளுக்காக சொந்த மகளை விற்ற தந்தை: வாங்கியவர் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

தனது சொந்த மகளை 2 பவுண்டுகளுக்கு ஒரு தந்தை விற்க, அவளை வாங்கியவரோ உடனே அந்த பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார்.

பாகிஸ்தானில் தனது சொந்த மகளை ஒரு தந்தை 2.45 பவுண்டுகளுக்கு விற்றிருக்கிறார். அந்த 12 வயது சிறுமியை வாங்கிய நபர் உடனே அவளை வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார்.

அந்த சிறுமியின் தாய் வேலைக்கு போயிருந்த நேரத்தில் இது நடந்திருக்கிறது. அந்த சிறுமியின் தாய் வேலையிலிருந்து திரும்பியதும், தனக்கு நேர்ந்த கொடுமையைக் குறித்து தாயிடம் கூறி கதறிக் கண்ணீர் வடித்திருக்கிறாள் அந்த சிறுமி.

தன் கணவன் தன் மகளை இன்னொரு நபருக்கு விற்றதையும், அந்த நபரை தன் வீட்டுக்கே அழைத்து அவளை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார் அந்த தாய்.

பொலிசார் உடனே அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்க, மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையில், அவளை யாரோ ஒருவர் வன்புணர்வு செய்ய முயன்றதைக் கண்டறிந்துள்ளனர்.

பொலிசார் அந்த தந்தையையும், அவரது மகளை வாங்கிய நபரையும் கைது செய்து, அவர்கள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பெண் ஒருவரை விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...