சிறைவைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்களை விடுவித்தது பாகிஸ்தான்...!

Report Print Abisha in தெற்காசியா

பாகிஸ்தான் வசம் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் காடற்படையால் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 6 மாதங்கள் சிறை தண்டனைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டபடி சில நடைமுறைகள் தாமதமானதால் 5ஆம் திகதி ஞாயிற்று கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் வசம் 200க்கும் மேற்பட்ட மீனர்கள் சிக்கியுள்ளதாகவும், மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை கைது செய்தபின் மரியாதையுடன் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தான், 2018ஆம் ஆண்டு 360 மீனவர்களை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்