அவள் என் மனைவி.. மீண்டும் திருமணம் செய்து கொள்வது நியாயமா? ஆதாரங்களை காட்டி கதறிய கணவன்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மனைவி இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதை அறிந்த கணவன் பதறியடித்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர் வீட்டில் மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து அங்கு மணமகன் வீட்டார் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

அப்போது அங்கு ராஜேஷ் என்ற இளைஞர் பதறியபடி வந்து இங்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யும் பெண் என் மனைவி, அவருக்கு மீண்டும் எப்படி திருமணம் செய்து வைப்பீர்கள் என கூறி அதிரவைத்தார்.

மேலும் 2013-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறிய ராஜேஷ் அது தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் திருமண சான்றிதழை அங்குள்ளவர்களிடம் காட்டினார்.

இதையடுத்து நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது, ஆனால் மணப்பெண் வீட்டார் இது குறித்து பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் ராஜேஷை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அதன்பின்னர் மீண்டும் அதே வீட்டுக்கு வந்து அவர் போராட்டம் நடத்தி, என் மனைவியை என்னுடன் அனுப்புங்கள் என கூறினார்.

இதனிடையில் ராஜேஷும், மனைவியும் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏன் தனித்தனியாக வசித்தார்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் பெண்ணின் குடும்பத்தாரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்