திருமணத்துக்கு பின் தந்தையை பிரிந்து சென்ற புதுப்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்பரைஸ்... வெளியான வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லவிருந்த மகளுக்கு மனதை உருக்கும் விதத்தில் அவர் தந்தை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர் ரீனா. இவருக்கும் சந்தீப் என்ற இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

பொதுவாக திருமணம் முடிந்த பின்னர் பெற்றோரை பிரிந்து கணவர் வீட்டுக்கு செல்லும் புதுப்பெண் கண்களில் கண்ணீர் வரும்.

ஆனால் ரீனாவின் தந்தை மகேந்திரா மகளுக்காக செய்திருந்த ஏற்பட்டால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த ரீனா ஆனந்த கண்ணீருடன் பெருமையையும் அடைந்தார்.

அதாவது, ரீனாவும் அவர் கணவர் சந்தீப்பும் புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டரை மகேந்திரா தயாராக வைத்திருந்தார்.

இந்த பிரம்மாண்ட ஏற்பாடுகளை பார்த்து நெகிழ்ந்து போன ரீனா மகிழ்ச்சியுடன் அதில் ஏறி சென்றார்.

இது குறித்து மகேந்திரா கூறுகையில், ஒரு வருடத்துக்கு முன்னரே ஹெலிகாப்டரில் என் மகளை அனுப்புவது குறித்து திட்டமிட்டேன்.

இதன்மூலம் என் மகள் புதுவித அனுபவத்தையும், ஆச்சரியத்தையும் பெற வேண்டும் என விரும்பினேன்.

அது நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்