கணவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்த மனைவி! வைரலாகும் ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தனது கணவருக்கு வேறு பெண்ணை மனைவி திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கமர்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராம கபாசி. இவர் மனைவி காயத்ரி.

இந்நிலையில் கபாசிக்கு ஆயிதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் தீவிரமாக காதலித்தனர்.

இந்த விடயத்தை அறிந்த காயத்ரி கோபமடையாத நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு அதிரடியான முடிவை எடுத்தார்.

அதன்படி தனது கணவர் கபாசியை ஆயிதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த காயத்ரி அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

அங்குள்ள பெரிய கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் கிராம மக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தை புரோகிதர் சம்பிரதாய முறைப்படி நடத்திய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

திருமணம் முடிந்த பின்னர் புதுமணத்தம்பதியை காயத்ரி புன்முறுவலோடு வீட்டுக்கு வரவேற்றார். தற்போது காயத்ரி, கபாசி மற்றும் ஆயிதி ஆகிய மூவரும் ஒரே வீட்டில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்