நான்கு பேரும் தமிழர்கள்? கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சம்பவத்தில் வெளியான தகவல்

Report Print Santhan in தெற்காசியா

கேரளாவில் தண்டர்போல்ட் படையினரால் மாவோயிஸ்ட்டுகள் நான்கு பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட நிலையில், மற்ற இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டு அவர்க்ளும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கிராமத்திலுள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில், கடந்த அக்டோபர் மாதம் 30 -ஆம் திகதி கேரள காவல்துறையின் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டு கொல்லப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் சென்னையை சேர்ந்த கார்த்தி, சேலத்தை சேர்ந்த மணிவாசகம் என்று கேரள அரசு அறிவித்தது.

மற்ற இரண்டு பேரில் ஒருவர் அரவிந்த் எனவும், மற்றொரு பெண் ஸ்ரீநிதி என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்கள் இரண்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா எனவும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் எனவும் தெரிய வந்துள்ளது.

சீனிவாசனின் சகோதரர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலைப் பார்த்து அடையாளம் கூறியுள்ளார். கேரள அரசியலில் தற்போது மாவோயிஸ்ட் என்கவுண்டர் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...