வங்கதேசத்தில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 14 பேர் பலி

Report Print Basu in தெற்காசியா

தெற்காசியா நாடான வங்கதேசத்தில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kosba upazila-வின் Mondobagh பகுதியில் செவ்வாய்க்கிழமை நவம்பர் 12ம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

Chattogram-ல் இருந்து டாக்கா செல்லும் Turnanishita விரைவு ரயிலும், Sylhet-ல் இருந்து Chattogram செல்லும் உதயன் விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோஸ்பா, அகவுரா மற்றும் ஜிலா சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த ரயில்வே செயலாளர் Mohammad Mofazzal Hossain, விபத்து தொடர்பில் விாரணை மேற்கொள்ள தனித்தனியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் விபத்து குறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றொரு தனிக்குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீத், கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிக்னல் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers